Ad Widget

தயா மாஸ்டர் விளக்கமறியலில்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

thaya-daya-master

இறுதி யுத்தத்தின் போது, சாதாரண மக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தமை தொடர்பில், கொழும்பு நீதவான் முன்னிலையில் தயா மாஸ்டரால் வழங்கப்பட்ட வாய்மொழி அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இந்த வழக்கினைத் தாக்கல் செய்துள்ளனர்.

இதன்படி, சந்தேகநபரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, வவுனியா நீதிமன்றத்தில் ஆஜரான தயா மாஸ்டரை 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் நான்கில் (4 அரச அதிகாரிகள் பிணை வழங்க வேண்டும்) விடுவித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எனினும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்வதில் காணப்பட்ட சிரமம் காரணமாக அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேகநபர் வட மாகாணத்தை விட்டு வௌியே செல்லக் கூடாது எனவும், ஒவ்வொரு நாளும் காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிக்குள் யாழ்ப்பாண பொலிஸில் ஆஜராகுமாறும் பிணை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Posts