மாற்றுத் திறனாளி சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்திய நான்கு பேருக்கு யாழ் மேல் நீதிமன்றம் 15 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் யாழ்ப்பாணத்தில் வைத்து மாற்றுத் திறனாளி சிறுமியொருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக, இவர்கள் நால்வர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வழக்கு விசாரணைகள் யாவும் முடிவடைந்து நேற்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதன்போது, சந்தேகநபர்கள் நான்கு பேரையும் குற்றவாளிகளாக தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன், அவர்களுக்கு பதினைந்து வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அத்துடன் குற்றவாளிகள் நான்கு பேரும் தலா ஐந்து இலட்சம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஸ்டஈடு வழங்க வேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் மேலும் இரண்டரை வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக தலா 25,000 ரூபா அபராதமும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது.