யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு, யாழ். கல்வி வலயத்தில் அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
யாழ் வலையக் கல்விப் பணிப்பாளர் என்.தெய்வேந்திரராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சென் ஜேம்ஸ் வித்தியாலயம் (வகை-2), நாவாந்துறை றோ. க. வித்தியாலயம் (வகை-2), கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயம் (வகை-2), கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாலயம் (வகை-2), கொழும்புத் துறை சென். ஜோசப் வித்தியாலயம் (வகை-02), சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை (வகை-3), கொக்குவில் மேற்கு சீ.சீ.த. க பாடசாலை (வகை-03) ஆகிய பாடசாலைகளுக்கே இவ்வாறு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பப் படிவங்களை யாழ். கல்வி வலயத்தின் பொது நிர்வாகக் கிளையில் பெற்றுப் பூர்த்தி செய்து எதிர்வரும்-15-08-2016ம் திகதிக்கு முன்னர் வலயக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு, தெய்வேந்திரராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.