ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவருக்கு மரண தண்டனை

கொலைச் சம்பவமொன்றில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு, நுவரெலிய மேல் நீதிமன்றம், இன்று வௌ்ளிக்கிழமை (05) மரண தண்டனை விதித்தது.

2000ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் குற்றவாளிகளுக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, வென்ஷர் தோட்டத்தைச் சேர்ந்த நபரொருவரைக் கொலை செய்தார்கள் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ், சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

நீண்டகால வழக்கு விசாரணையின் பின்னர், மேற்படி கொலையின் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவருக்கும், நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க, இன்று மரண தண்டனை விதித்தார்.

Related Posts