தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் பிரிவின் தலைவி தமிழினியினால் எழுதப்பட்ட ´ஒரு கூர்வாளின் நிழல்´ என்ற நூல் விற்பனை மூலம் பெறப்பட்ட 3,00,000 ரூபாய் வருமானம் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்வு இன்று வௌ்ளிக்கிழமை (05) காலை இடம்பெற்றது.
குறித்த பணத்தொகையை வைத்தியசாலைக்கு வழங்கும் நிகழ்வில் தமிழினியின் கணவர் எஸ் ஜெயகுமாரன், நூல் வெளியீட்டாளர் தர்மசிறி பண்டாரநாயக்க, சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேஷப்பிரிய ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழினியினால் எழுதப்பட்ட இந்த சுயசரிதை நூல் கடந்த மார்ச் மாதம் 19ம் திகதி கிளிநொச்சியில் வௌியிட்டு வைக்கப்பட்டதுடன் அதன் சிங்களப் பிரதி கடந்த மே மாதம் 13ம் திகதி வௌியிடப்பட்டது.
குறித்த புத்தகம் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த சந்தர்ப்பத்தில் எழுதப்பட்டதுடன், அதனை வெளியிடுவதற்கு முன்னர் தமிழினி உயிரிழிந்தார்.