ஐரோப்பியரை விட 5 மடங்கு அதிகம் மதுவருந்தும் இலங்கையர்கள்!!!

தனிநபர் மதுபான நுகர்வு ஐரோப்பாவை விட ஐந்து மடங்கு அதிகம் என்று தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையின் தலைவர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் சிறிலங்காவும் தாய்லாந்தும், அதிகளவு தனிநபர் மதுபான நுகர்வில் முன்னிலையில் இருக்கின்றன.

சிறிலங்காவில் 35 வீதமான ஆண்களும், 3 வீதமான பெண்களும் மதுபானப் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர்.

ஆறு மில்லியன் மக்கள்- சிறிலங்காவின் சனத்தொகையில் 40 வீதமானோர்- மதுபானப் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். 40 ஆயிரம் பாடசாலை மாணவர்கள் புகைப்பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

சிறிலங்காவில் ஒரு கிராம அதிகாரி பிரிவில் உள்ளவர்களால், மாதம் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் ரூபா மதுபானத்துக்காகவும், 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபா புகைத்தலுக்காகவும் செலவிடப்படுகிறது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆண்டு தோறும், புகையிலை மற்றும் மதுபான வரிகள் மூலம் 143 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கிறது.

ஆனால், புகையிலை மற்றும் மதுபான பழக்கத்தினால் 212 பில்லியன் ரூபா சுகாதார இழப்புகள் ஏற்படுகின்றன.

வெளிநாடுகளில் மதுபானத்துக்கு அடிமையானவர்கள் அதிகம் என்றாலும், அவர்களின் மதுபான நகர்வு குறைவானது. ஆனால் சிறிலங்காவில் மதுபானத்துக்கு அடிமையானவர்கள் குறைவு என்றாலும், அவர்களின் நுகர்வு அதிகமானது.

இளம் சமூகத்தினரை மதுபானத்துக்கு அடிமையாகாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

மதுவுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கு ஆறு மருத்துவமனைகள் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts