வரவு செலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்களினால், வேன்களின் விலை சுமார் 10 இலட்சத்தினால் வீழ்ச்சியடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
வாகன இறக்குமதியின் போது காணப்பட்ட 5 வரிகளுக்கு பதிலாக இம் முறை வரவு செலவுத்திட்டத்தில் உற்பத்தி வரி ஒன்று மாத்திரமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக வேன் இறக்குமதிக்காக அறவிடப்பட்ட 152 வீத வரி 98 வீதமாக குறைவடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏனைய ரக வேன்களின் விலை 5 தொடக்கம் 10 இலட்சம் வரை வீழ்ச்சியடையும் என்று இந்திக சம்பத் மெரிங்சிகே மேலும் தெரிவித்தார்.
இதே போன்று சிறிய வாகனங்களுக்கான விலைகளும் வீழ்ச்சியடையும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எவ்வாறாயினும் பெரும்பாலான வாகனங்களின் விலையில் பாரிய மாற்றங்கள் காணப்படவில்லையென வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பணியாளர்களுக்கு வாகன இறக்குமதிக்கான வரிச் சலுகை இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும் இது தொடர்பில் இதுவரையில் உறுதியான நடைமுறைகள் வெளிப்படுத்தப்படவில்லையென இலங்கை மோட்டார் வாகன இறக்குமதியாளர் சங்கம் மற்றும் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.