அரச உத்தியோகத்தர்களுக்கு சலுகை அடிப்படையில் வாகனங்களை வழங்கும் யோசனை திட்டத்தை திருத்தங்களுடன் மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சலுகை அடிப்படையில் வழங்கும் வாகனங்களின் அனுமதிப் பத்திரத்தின் பெறுமதி 30,000 அமெரிக்க டொலர்கள் எனவும், முழு வரியில் இருந்து 50 வீதத்தை சலுகை அடிப்படையில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.