வருடத்தின் இதுவரையான காலப்பகுதியிலான எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2500 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த தொற்றினால் இதுவரையில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தொற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்தார்.
எலிக்காய்ச்சல் காரணமாக நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சேற்று நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் தொழில்புரிவோருக்கு எலிக் காய்ச்சல் பரவக்கூடிய சாத்தியம் அதிகமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.