இலங்கை கிரிக்கெட் அணியின் முன்ளாள் நட்சத்திர வீரர் முரளிதரனையும் அரசாங்கம் அவதூறு செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
கண்டி கடம்பே பிரதேசத்தில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
வற் வரி, பட்டத்தாரிகளுக்க தொழில் இன்மை, உள்ளிட்ட மக்கள் விரோத செயற்பாடுகள் மற்றும் மக்களை நெருக்கடிக்குள் ஆழ்த்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் அணி திரண்டுள்ளனர்.
தமக்கு விருப்பமில்லா அரசியல்வாதிகள் மட்டுமன்றி முரளிதரன் போன்ற விளையாட்டு வீரர்களையும் அரசாங்கம் அவதூறு செய்கின்றது.
அரசாங்கத்தின் நெருக்கடிகளுக்கு எதிராக மக்கள் அணி திரண்டுள்ளனர். வெளிநாடுகளுடன் எவ்வாறான உடன்படிக்கை கைச்சாத்திட்டாலும், வற் வரியில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
முதலில் நாடு மற்றும் மக்கள் பற்றி சிந்திக்க வேண்டும். மக்களுக்கு தேவையானதை பெற்றுக்கொள்ளவே மக்கள் அணி திரண்டுள்ளனர்.
பொலிஸார் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்படுகின்றனர். எவ்வாறான தடைகள் விதித்தாலும் அரசாங்கத்திற்கு எதிரான பாத யாத்திரை கொழும்பை சென்றடையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.