உலக யுத்தம் குறித்து புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் ஐரோப்பாவை இலக்கு வைத்து ஜிகாதிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றமை தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறெனினும் தாம் மதங்களுக்கு இடையில் யுத்தம் நடைபெறுவதாக குறிப்பிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேவைகள், பணம் மற்றும் வளங்களுக்காக இவ்வாறு மோதல் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
உலகம் பாதுகாப்பாற்ற நிலையை உணர்வதாகவும், உண்மையில் யுத்தம் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகம் சமாதானத்தை இழந்து யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த உண்மையை சொல்ல அஞ்சத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.