Ad Widget

ரஜினியுடன் படம் பார்த்தவரே திருட்டு வீடியோ எடுத்து வெளியிட்ட கேவலம்!

அமெரிக்காவில் கபாலி சிறப்புக் காட்சியை நேற்று பார்த்தார் நடிகர் ரஜினிகாந்த். அவருடன் அந்தக் காட்சியைப் பார்த்த ஒருவர் முழுப் படத்தையும் செல்போனில் வீடியோ எடுத்த கொடுமையும் நடந்துள்ளது.

rajini-us-2

தமிழ் சினிமாவை திருட்டு வீடியோ மிகக் கடுமையாக பாதித்து வருகிறது. இந்த திருட்டு வீடியோ உலகமே கொண்டாடும் ரஜினிகாந்த் படத்தையும் விட்டு வைக்கவில்லை.

கபாலி படம் நாளை உலகெங்கும் 5000-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி அமெரிக்காவில் உள்ள ரஜினிக்கு போட்டுக் காட்டப்பட்டது. இந்தக் காட்சியை தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் பார்த்து ரசித்தார் ரஜினி.

rajini-us

படம் பார்த்து முடித்ததும் இயக்குநர் ரஞ்சித்துக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்தக் காட்சி நடந்து கொண்டிருந்தபோது, படம் பார்க்க வந்திருந்த ஒருவர் தனது செல்போனில் படம் முழுவதையும் பதிவு செய்துள்ளார். அதிலிருந்து ஒரு காட்சியை மட்டும் நேற்று சமூக வலைத்தளங்களில் அவர் பரப்ப, அது பரபரப்பாக வலம் வர ஆரம்பித்தது.

rajini-us-1

அந்த நபரின் செல்போன் நம்பருடன் இந்தக் காட்சி வெளியாகியிருந்ததால், உடனடியாக அந்த நபரின் செல்போனைக் கைப்பற்றினர். ஆனால் நபர் யாரென்று மட்டும் காட்டாமல் மறைத்துள்ளனர். அந்த சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்தவருக்கு வேண்டப்பட்ட நபர் என்பதால் அவர் யாரென்ற விபரத்தை மறைத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

அமெரிக்க சட்டப்படி இந்த மாதிரி திருட்டு வீடியோ வெளியிடும் ஆசாமிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. எனவேதான் அந்த நபர் பற்றிய விபரத்தை மறைத்திருக்கலாம் என்கிறார்கள்.

இந்த மாதிரி வீடியோக்களை ஆதரிக்காதீர்கள், பரப்பாதீர்கள் என்று தயாரிப்பாளர் தாணு கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Posts