நாமல் பிணையில் விடுதலை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்று கொழும்பு கோட்டே நீதிமன்றில் நாமலை முன்னிலைப்படுத்தியபோதே பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, நாமல் ராஜபக்ஸவுக்கு, 50,000 ரூபா ரொக்கப்பிணையிலும், ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணையிலும் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்க ஜயரத்ன இன்று தெரிவித்தார்.

மேலும், நாமலை அடுத்த மாதம் 8ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

70 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் நாமல் ராஜபக்ஸ மீது குற்றம் சுமத்தி அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts