மருந்துகளின் விலைகளை குறைப்பது தொடர்பிலான நடைமுறை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தயாரிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மருந்து தொடர்பான புதிய சட்டத்தில் மருந்துகளை கொள்வனவு செய்யும் நடைமுறையின் அளவு குறைக்கப்படும் எனவும் சில நிறுவனங்களின் ஏகபோக உரிமை காரணமாக அவை மீறப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் மருந்துகளின் விலையை 100க்கு 85சதவீதமாக குறைக்குமாறு தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழு இதற்கு முன்னர் வழங்கிய அறிவுறுத்தல், துரதிஷ்டவசமாக இன்னும் நிறைவேறவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சுமார் 4 ஆயிரம் மருந்து வகையில் இலங்கையில் விநியோகிக்கப்படுவதாகவும் அதற்கு விலை நிர்ணயம் செய்யவேண்டிய அவசியம் உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.