யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் 24 மணித்தியால தொடர்பிலக்கங்கள் அறிவிப்பு

மாநகர சபையின் தீயணைப்புச் சேவையைப் பெறுவதற்கான தொடர்பு இலக்கங்களை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி தீவிபத்து ஏற்படும் பட்சத்தில்,0213207777 மற்றும் 0777040126 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

குறித்த சேவை 24 மணித்தியால சேவையாகும். தீ விபத்து ஏற்பட்டு பரவ முன்பதாக ஆரம்ப நிலையிலேயே அறிவித்தால் ஏற்படப் போகும் பாரிய சேதத்தைத் தவிர்க்க முடியுமெனவும் தீயணைப்புப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Posts