மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, படுத்துறங்குவதற்கு பாய்க்கு பதிலாக மெத்தை வழக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைவாக வைத்தியரின் பரிந்துரையை கவனத்தில் கொண்டே மெத்தை வழங்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்த அதிசொகுசு மெத்தை, அவரின் வீட்டிலிருந்தே பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அவ்வதிகாரி தெரிவித்தார். அவர், சிறைச்சாலையினால் வழங்கப்பட்டுள்ள தலையணையை மட்டுமே தற்போதைக்கு பயன்படுத்துகின்றார் என்றும் அவ்வதிகாரி தெரிவித்தார்.
சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர், ஜே கூண்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அதற்கு அண்மையுள்ள கூண்டுக்குள் போதைப்பொருள் குற்றவாளிகள் 30 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.