Ad Widget

துருக்கியின் ஆட்சியை பிடித்தது இராணுவம்! எதிராக பொதுமக்கள் போராட்டம்!!

ஐரோப்பிய ஒன்றிய நாடான துருக்கியில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இராணுவப் புரட்சி வெடித்துள்ளது.

இதையடுத்து பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் இடையே மூண்ட சண்டையில் 17 பொலிஸார் உயிரிழந்தனர் எனக் கூறப்படுகின்றது. தொடர்ந்தும் அங்கு சண்டை நீடித்து வருகின்றது.

durukki-2

இதேசமயம் இராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்களும் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

புரட்சியாளர்கள் அதாதுர்க் சர்வதேச விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அத்துடன் தலைநகரின் முக்கிய இடங்களும் அவர்கள் வசமே உள்ளது.

நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை வென்றெடுக்கவே இந்த புரட்சியை தாம் ஆரம்பித்துள்ளனர் என இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.

durukki-1

எனினும் இந்த சதிப்புரட்சியை அந்நாட்டின் பிரதமர் இல்ட்ரிம் மறுத்துள்ளார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை மக்கள் மட்டுமே ஆட்சியில் இருந்து அகற்ற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இராணுவத்தின் ஒரு சில உயரதிகாரிகளே இந்த செயலை செய்கின்றனர் என்றும் அவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரும் எனவும் பிரதமர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்றம் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்துடன் தலைநகரில் முக்கியஸ்தர்கள் பலர் பணயக் கைதிகளாக இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டுள்ளனர் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts