பல்கலைக்கழக பணியாளர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு!

அரச பணியாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாய் மாத சம்பளத்தை பல்கலைக்கழகங்களில் பணி புரியும் பணியாளர்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்கான சுற்றரிக்கையினை வெளியிடுவதற்கு உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழகங்களின் அலுவலக பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது எல்லையானது 57 இல் இருந்து 60 வரை அதிகரிக்கப்படவுள்ளது.

இவர்களுக்கான விசேட கொடுப்பனவாக 20 வீதத்தை ஊழியர் சேமலாப நிதியில் வைப்பிலிடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் பீ.ஜீ.ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசியல் பழிவாங்கல்களினால் பிரச்சினைகளை எதிர்கொண்ட பல்கலைக்கழக அலுவலக சபை அதிகாரிகளுக்கு நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கவும் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், இன்னும் இரண்டு வாரங்களில் குறித்த நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Related Posts