இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அனுமதி வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்படியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் வடக்கு மீனவர்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டொன்றின் 75 நாட்களுக்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர்கள் கூறியிருந்தனர்.
இது தொடர்பில் கருத்து வௌியிட்ட கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அந்த செய்தியில் உண்மையில்லை என்று கூறினார்.
75 நாட்களுக்கு அல்ல 75 செக்கன்களுக்கும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை என்று அவர் கூறுகிறார்.
அத்துமீறி மீன்படியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
நீதிமன்ற உத்தரவுப்படி மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களின் படகுகளோ மீன்படி வலைகளோ விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.