மூன்று நாள் பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் அரசாங்கத் தொலைக்காட்சியான ரூபவாகினி தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார்.
ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் ‘நுகசெவன’ என்ற சமையற்கலை தொலைக்காட்சி நிகழ்ச்சியிலேயே கலந்துகொண்டார்.
இலங்கையின் பிரபல சமையற்கலை நிபுணர் பப்ளிஸ் சில்வாவின் வழிகாட்டலின் கீழ் நிஷா பிஸ்வால் உள்ளூர் உணவொன்றைச் சமைத்துக் காட்டினார்.