ஒட்டுமொத்தக் குடும்பத்தை சிறையில் அடைத்தாலும் மக்களுக்கான எனது அரசியல் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.
நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டு, ஒரு சில நிமிடங்களில் தனது பேஸ்புக்கில் இட்டுள்ள பதிவொன்றிலேயே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தன் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி தனது பிள்ளைகளை சிறை வைப்பதன் ஊடாக எனது அரசியல் பயணத்தை தடுத்து நிறுத்தி விடலாம் என இவர்கள் நினைத்தால் அது வெறும் கானல் நீராகவே இருக்கும் என்றும் மஹிந்த தனது முகப்புத்தக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர், சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லும் வரையான சம்பவங்களை முகப் புத்தகத்தின் ஊடாக நேரடியாக நாமல் ராஜபக்ச தரப்பு ஒளிபரப்பு செய்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.