Ad Widget

“பீப்’ பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் அமைப்புகள் சுவாதி கொலைத் தொடர்பாக பெரிய அளவில் பேசவில்லை: டி. ஆர்

“பீப்’ பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் அமைப்புகள் சுவாதி கொலைத் தொடர்பாக பெரிய அளவில் பேசவில்லை என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

tr

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

சிம்பு “பீப்’ பாடல் பாடியதற்காக எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் அமைப்புகள் உள்ளிட்ட சமூக அமைப்புகள், சுவாதி கொலைத் தொடர்பாக பெரிய அளவில் பேசவில்லை. ஆனால் நான், பாஜக உள்ளிட்ட பிற கட்சியினர் கொலைச் சம்பவத்தைக் கண்டித்ததுடன் குற்றவாளியை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம்.

தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் அதிகமாக நிகழ்வதால், மாநில அரசு மீது குற்றம் சுமத்த முடியாது. தற்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் சட்டம்-ஒழுங்கு சரி செய்ய படிப்படியாக நடவடிக்கை எடுப்பார்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் லட்சிய திமுக போட்டியிடுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். இது சம்பந்தமாக திருச்சி, கோவை பகுதிகளில் வருகிற 17 ஆம் தேதி கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கவுள்ளேன்.

இனிமேல் கூட்டணியை நம்பி பயனில்லை. எனக்கு அரசியல் அனுபவம் நிறைய இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளைப் பற்றி மக்கள் சிந்திக்காமல், தேர்தல் நேரத்தில் அவசர முடிவு எடுக்கிறார்கள். யார் நல்லவர்கள் என மக்கள் சிந்திக்க வேண்டும்.

சட்டப்பேரவையில் திமுக பலம் கொண்ட எதிர்க்கட்சியாக இருந்தாலும் கச்சத்தீவு உள்ளிட்ட பல பிரச்னைகளைப் பற்றி பேசாமல் உள்ளனர் என்றார் அவர்.

Related Posts