ஊடகவியலாளர்களுக்கு முழுநாள் செயலமர்வு

தமிழ் ஊடகவியலாளர்களுக்கான முழுநாள் செயலமர்வு ஒன்றை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருக்கின்றது.

இம்மாத இறுதியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் இந்த செயலமர்வில் தகவல் அறியும் சுதந்திரம் முதல் ஊடகவியலாளர்களின் உரிமைகள் வரையில் பல்வேறு விடயங்களும் உள்ளடக்கப்படுகின்றன.

இதில் பங்கு கொள்ள விரும்பும் ஊடகவியலாளர்கள் tmailmedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகத் தம்முடன் தொடர்புகொண்டு தங்களுடைய விபரங்களுடன் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் மட்டுமே செயலமர்வில் உள்ளடக்கப்படுவார்கள் என்பதால் முன்கூட்டியே தம்மை பதிவுசெய்துகொள்ளுமாறு ஒன்றியத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts