கூட்டு எதிர்க்கட்சி நேற்றுமுன்தினம் நிறுவிய நிழல் அமைச்சரவை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த நிழல் அமைச்சரவையில் வழங்கப்பட்டுள்ள பிரதமர் மற்றும் ஏனைய அமைசுக்களிலிருந்து தன்னை நீக்குமாறும் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார் என்று அரசியல் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
நிழல் அமைச்சரவை ஒன்றை அமைக்காமல், அமைச்சரவையை மேற்பார்வை செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்குமாறே மஹிந்த ராஜபக்ஷ கூட்டு எதிர்கட்சிக்கு ஆலோசனை வழங்கியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, நிழல் அமைச்சரவையில் நீர்வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்ட லொஹான் ரத்வத்த, தனக்கு வழங்கப்பட்டுள்ள பதவியை நீக்குமாறும் கூட்டு எதிர்க்கட்சிக்கு அறிவித்துள்ளார்.