அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் உள்ள பேட்டன் ரூஜ் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கடையின் வெளியே கருப்பினத்தைச் சேர்ந்த ஆல்டன் ஸ்டெர்லிங்(37) என்பவரை கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் துடிதுடிக்க சுட்டுக் கொன்றனர்.
இச்சம்பவம், அமெரிக்காவில் வாழும் கருப்பின மக்களை கொதிப்படைய வைத்துள்ளது. பல பகுதிகளில் போலீசாரின் அத்துமீறலுக்கு எதிராக கருப்பின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நெஞ்சை பதைக்கவைக்கும் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு தொடர்பான வீடியோ காட்சியை போலீசாரால் அவசியமே இல்லாமல் சுட்டுக் கொல்லப்பட்ட வாலிபரின் தோழி தனது செல்போன் மூலம் ‘லைவ்’ ஆக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்பியுள்ள சம்பவம் அமெரிக்காவில் கருப்பினத்தவருக்கு எதிராக நடைபெற்றுவரும் அரச வன்முறையை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.
அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தில் தனது தோழி டைமன்ட் ரேனால்ட்ஸ் மற்றும் அவரது நான்குவயது குழந்தையுடன் காரில் சென்றுகொண்டிருந்த பிலன்டோ கேஸ்ட்டைல்(32) என்பவரை வழிமறித்த போலீசார், அவரை கைகளை உயர்த்தும்படி உத்தரவிட்டனர்.
காரை ஓட்டிவந்த அவர் என்ஜினை அணைத்துவிட்டு, கையை தூக்கியபடி அமர்ந்திருக்க, காரின் கதவருகே நெருங்கி வந்த ஒரு போலீஸ் அதிகாரி தனது கைத்துப்பாக்கியால் ஐந்துமுறை அவரை சரமாரியாக சுட்டுக் கொன்றார். பிலன்டோ கேஸ்ட்டைல் மூச்சுத்திணறி உயிரைவிடும் இந்தக் கொடூரக் காட்சியை முன் சீட்டில் அமர்ந்திருந்த அவரது தோழியான டைமன்ட் ரேனால்ட்ஸ் தனது செல்போன் மூலம் ‘லைவ்’ ஆக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்பியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வுத்துறையின் விசாரணைக்கு உத்தரவிடுமாறு மின்னெசோட்டா மாநில கவர்னர் மார்க் டேய்ட்டன் பரிந்துரை செய்துள்ள நிலையில், தனது செல்போனை போலீசார் பறிமுதல் செய்துவிட்டதாகவும், அதில் இருந்த ஆதாரங்களை அவர்கள் அழித்துவிட முயற்சிக்கக்கூடும் என்றும் இந்த படுகொலையை நேரில் பார்த்த சாட்சியான டைமன்ட் ரேனால்ட்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவை (பலகீனமான இதயம் கொண்டவர்களுக்கானது அல்ல) காண..,