MOL Benefactor’ என்னும் 10,000 TEUS (20 அடி கொள்கலன்கள் 10,000) கொள்ளளவு உடைய ஜப்பானின் பிரபல கப்பல் நிறுவனமான Mitsui O.S.K lines னுடைய கொள்கலன் கப்பல் (Neopanamax Container ship) விஸ்தரிக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்ட பனாமாக் கால்வாய் (Expanded Panama Canal) வழி முதலாவதாக வர்த்தக ரீதியான பயணத்தை கடந்த 1 ஆம் திகதி மேற்கொண்டுள்ளது.
இந்தப் பயணத்திற்காக குறித்த கப்பல் நிறுவனம் பனாமாக் கால்வாய் அதிகாரசபைக்கு (Panama Canal Authority) 839,468/- அமெரிக்க டொலர்களைச் செலுத்தியுள்ளனர்.
வரத்தக ரீதியில் முக்கிய விடயம் ஆகையால் மேற்குறித்த செய்தி உலகளாவிய ரீதியில் (ஆங்கில) ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்பட்டிருந்தன.
முதலாவதாக அகலப்படுத்தப்பட்ட பனாமாக் கால்வாய் வழி பயணித்த ‘MOL Benefactor’ கப்பலின் கப்டன், இலங்கைத் தமிழரான கப்டன் எம்.மங்களேஸ்வரன் (Capt.Mankkaleswaren) ஆவார் என்பது ஆகும்.
குறித்த தகவலை ‘Memebers of Srilankan Master Mariners’ பெருமையுடன் தமது உறுப்பினர்களுக்குத் தெரிவித்துள்ளதுடன், மங்களேஸ்வரனுடைய கப்பல் நிறுவனமான MOL நிறுவனமும் ஒரு பிரத்தியேக செய்தி குறிப்பின் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.