வங்காளதேச தலைநகர் டாக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 20 வெளிநாட்டவர்கள் பலியான சம்பவத்தின் அதிர்வலைகள் இன்னும் மறையவில்லை. இந்த நிலையில், அங்கு ரமலான் தொழுகை நடைபெற்ற இடம் அருகே குண்டு வெடித்தது.
வங்கதேசத்தின் கிஷாரிகஞ்ச் பகுதியில் ரம்ஜான் பண்டிகையை பிரம்மாண்ட தொழுகை நடைபெற்றது.
இந்த தொழுகை நடந்த இடத்திற்கு அருகே வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த குண்டு வெடிப்பில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 9.30 மணியளவில் இந்த குண்டு வெடிப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. குண்டு வெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.