இவ் வருடத்துக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்கள் தற்போது தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பாடசாலைகள் மூலம் தோற்றுபவர்களுக்கு அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு அவரவர் முகவரிக்கும் இவ்வாறு அனுமதிப் பத்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உரிய தினத்துக்கு முன்னர் அனுமதிப் பத்திரம் கிடைக்காத தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 0112 78 42 08 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், அதில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் பரீட்சார்த்திகள் இம் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் 2ம் திகதி ஆரம்பமாகி 27ம் திகதி நிறைவடையவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.