Ad Widget

யாழில் மீள்குடியேறும் மக்களுக்கான உதவித்திட்டங்கள்!

யாழ் பலாலி மற்றும் வறுத்தலைவிளான் பகுதிகளில் மீள்குடியேற்ற அமைச்சின் நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

varuththali-velan

வலி வடக்கில் முப்படையினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மீளக் குடியமரும் மக்களின் குடிநீர்த் தேவையினை பூர்த்தி செய்யும் முகமாக வறுத்தலைவிளான் உள்ளிட்ட 07 இடங்களில் குடிநீர்த் தொட்டி அமைத்தல் திட்டத்தின் கீழ் முதலாவது நீர்த்தொட்டி வறுத்தலைவிளானில் அமைக்கப்பட்டது.

இதனை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உத்தியோகபூர்வமாக அண்மையில் (01) திறந்து வைத்தார். அதேபோன்று கடந்த ஆண்டு இறுதியில் விடுவிக்கப்பட்ட பலாலி வடக்கு பகுதியினைச் சேர்ந்த 144 குடும்பங்களிற்கான இருப்பிட வசதியின் கீழ் இவர்களிற்கான வீடுகளை அமைப்பதற்கான வேலைத்திட்டங்களையும் அமைச்சர் குறித்த தினத்தில் ஆரம்பித்து வைத்தார்.

இத் திட்டத்தின் கீழ் இப்பகுதியினை பூர்வீகமாக கொண்டவர்களில் சொந்தக் காணியினையுடைய 129 குடும்பங்களிற்கும் காணி அற்ற 15 குடும்பங்கறிற்குமாக மொத்தம் 144 வீடுகள் அமைக்கப்படவுள்ளது.

Related Posts