பாலியல் துஸ்பிரயோகம்; வரணி ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

வரணிப் பகுதி பாடசாலையொன்றில் மாணவியொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் மற்றும் சம்பவத்தை மறைப்பதற்காக செயற்பட்ட பழைய மாணவர்களது பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணை, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் சிறிநிதி நத்தசேகரன் இவ்வாறு உத்தரவிட்டார்.

கடந்த மாதம் நடுப்பகுதியில் வரணி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியர் ஒருவர், மாணவியொருவருடன் பாலியல் ரீதியான துர்நடத்தையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டிலும், அதற்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டிலும் 9 பேர் கைது செய்யப்பட்டதுடன், இவர்களில் நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts