அரச வைத்தியர்கள் சங்கம் திங்களன்று பணிப்பகிஷ்கரிப்பு

மாலபே தனியார் மருத்துவக்கல்லூரி சட்டரீதியான அந்தஸ்தை வழங்குவதற்காக சுகாதார அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்தியர்கள் சங்கம் நாளை மறுதினம் திங்கட்கிழமை அடையாள பணிப்பகிஷ்கரிப்பு ஒன்றில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் திங்கட்கிழமை காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை நாட்டிலுள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் பணிபுரியும் வைத்தியர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் நவீன் டீ சொய்ஸா தெரிவித்துள்ளார்.

மாலபே தனியார் மருத்துவக்கல்லூரியை இலங்கை வைத்தியசாலையில் பதிவு செய்வதற்காக சுகாதார அமைச்சும், உயர்கல்வி அமைச்சும் மேற்கொண்டுள்ள சதி முயற்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்கும்,

தேசியக் கொள்கைக்கு முரணாக இந்திய – இலங்கை பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும் இந்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts