Ad Widget

பங்களாதேஷ் தாக்குதலில் பணயக்கைதிகளா இரு இலங்கையர்களும் சிறைபிடிப்பு

பங்களதேஷ் தலைநகர் டாக்காவில் ஒரு கஃபேயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வெளிநாட்டவர் உள்ளிட்ட பலர் பணயக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

1931088766Bang

பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்களில் இரண்டு இலங்கையர்களும் அடங்குகின்றனர்.

இலங்கையர் இருவர் உள்ளிட்ட பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டில் இருக்கும் இலங்கை தூதரகம் கூறுகிறது.

அந்த இருவருடைய குடும்பத்திற்கும் தற்சமயம் தகவல் வழங்கியுள்ளதாக இலங்கைத் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.எனினும் அவர்கள் யார் எப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தற்போது கூறமுடியாது என்று அந்த பேச்சாளர் கூறினார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு டாக்கா நகரின் புறநகரான குல்ஷானிலுள்ள பிரபல கஃபேவைத் தாக்கிய தீவிரவாதிகள் பலரை பணயக்கைதிகளாக சிறைபிடித்துவைத்திருப்பதாக பங்களதேஷ் சிறப்பு காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதாகவும் ஐ.எஸ். அமைப்பு கூறியுள்ளது.

ஆனால் பங்களதேஷ் அரசு வெளியிட்டுள்ள தகவலில் இரண்டு போலிசார் மட்டுமே உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

டாக்காவின் செல்வச்செழிப்பான பகுதியில் அமைந்திருக்கும் ஹோலி ஆர்டிசான் பேக்கரி எனப்படும் இந்த கஃபேவுக்கு வெளிநாட்டவரும் மேல் மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் அதிகம் வருவது வாடிக்கை.

காவல்துறையினர் அந்தப் பகுதியை சுற்றிவளைத்து, தடுத்துள்ளதோடு அந்த பகுதி முழுமையையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். பிணையக்கைதிகளை மீட்கும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்படுகிறது.

Related Posts