புலி, வேதாளம் படங்களுக்குப்பிறகு ராக்கி ஹேட்சம் என்ற இந்தி படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன், தற்போது ஒரே நேரத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் சூர்யாவுடன் எஸ்-3 படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன், தனது அப்பா கமல் நடிக்கும் சபாஷ் நாயுடு படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தில் கமலின் மகளாகவே நடிக்கிறாராம் ஸ்ருதிஹாசன். அவர்கள் சம்பந்தப்பட்ட செண்டிமென்ட் காட்சிகளும் படத்தில் அதிகமாக இடம்பெற்றுள்ளதாம்.
அதேசமயம் கமர்சியல் ஏரியாவில் தனது மற்ற படங்களைப்போலவே இந்த படத்திலும் புகுந்து விளையாடி வருகிறாராம் ஸ்ருதிஹாசன்.
அதாவது, தனக்கான லவ் ட்ராக்கில் சமீபகாலமாக கவர்ச்சியில் அடக்கி வாசித்து வந்த ஸ்ருதி, இப்படம் மூன்று மொழிகளில் தயாராவதால் மூன்று மொழி ரசிகர்களையும் கருத்தில் கொண்டு கவர்ச்சி ஏரியாவில் கலக்கி எடுத்து வருகிறாராம்.
நடிப்பு விசயத்தில் ஸ்ருதிக்கு முழுசுதந்திரம் கொடுத்து வரும் கமல், இந்த படத்திலும் அவர் விசயத்தில் தலையிடாமல் முழு சுதந்திரம் கொடுத்து விட்டாராம்.