இலங்கை, அதன் இராணுவ படைகளை கட்டுப்படுத்துவதோடு, போர்க்காலத்தில் இழைக்கப்பட்டதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், தமிழ் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் என, ஐக்கிய நாடுகள் சபை இன்று தெரிவித்துள்ளது.
சர்வதேச நீதிபதிகள் உள்ளடங்களான ஒரு பயனுள்ள இடைக்கால நீதி பொறிமுறையின் கீழ், சாட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும், என, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் ரால் அல் ஹுசைனின் வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.