இலங்கையர்களின் எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், 2001ம் ஆண்டு மேற்கொள்கொள்ளப்பட்ட புள்ளிவிபரங்களின் படி ஆண்களின் எதிர்பார்க்கும் ஆயுட் காலம் 68.8 வயதாக காணப்பட்டதுடன் பெண்களுக்கான ஆயுட்காலம் 77.2 வயதாக நிலவியது.
இதேவேளை, 2011 தொடக்கம் 2013ம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி ஆண்களின் ஆயுட்காலம் 72 வயதாகவும் பெண்களின் ஆயுட்காலம் 78.6ஆகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது