Ad Widget

மாவை, சரவணபவனுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கெதிராக யாழ். நகரமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

mavai-sara-bavan-notes

இந்திய நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டரங்கைத் திறந்துவைக்க சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த 18ஆம் திகதி யாழ்ப்பாணம் பயணம் செய்திருந்தார்.

இத்திறப்பு விழாவுக்குவந்த அதிபர் மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவபணபவன் தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அழைத்திருந்தார்.

சரவணபவனின் அழைப்பிற்கிணங்க மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் யாழ் பயணத்தின்போது 30 வருடங்களாக தமது சொந்த இடங்களைவிட்டு அகதிகளாக வாழும் மக்கள் தமது காணிகள் விடுபடும் எனப் பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

இறுதியில் அந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் மக்கள் அதிருப்தியுற்றிருந்தனர்.

இந்நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டிருந்தமை தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இதன் காரணமாக, சரவணபவன், மாவைசேனாதிராஜா உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கேள்விகளை தொடுத்தவாறு இந்த சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.

Related Posts