Ad Widget

மீள்குடியேறுவதற்கு இடமில்லாதவர்களுக்கு காங்கேசன்துறையில் காணி

யாழ்ப்பாணத்தில், மீள்குடியேறுவதற்கான காணி இல்லாத மக்களுக்கு, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை அண்மித்தப் பகுதியில் காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது’ என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

இதற்காக, 140 ஏக்கர் காணியைப் பெறுவதற்குரிய அனுமதியை, மீள்குடியேற்ற அமைச்சிடம் கோரியுள்ளதாகவும் அவர் கோரினார்.

அமைச்சரவை அனுமதி கிடைக்கபெற்ற பின்னர், காணியில்லாத குடும்பங்களுக்கு தலா 2 பரப்பு என்ற அடிப்படையில் காணி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

‘தற்போது 971 குடும்பங்கள், தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் 606 குடும்பங்கள், நிரந்தரமாக காணி இல்லாதவர்கள்’ என்றும் அவர் கூறினார்.

‘விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில், அந்தந்த காணி உரிமையாளர்கள் மீள்குடியேறுவதற்கான வேலைத்திட்;டம் மிக மும்முரமாக இடம்பெற்று வருவதாகவும் மக்கள் தமது காணிகளை அடையாளப்படுத்தி கிராமசேவையாளருக்கு தெரிவிக்குமிடத்து, காணிகளை துப்பரவு செய்வதற்குரிய முதற்கட்ட உதவிகள் வழங்கி வைக்கப்படும்’ என்றும் அவர் மேலும் கூறினார்.

Related Posts