தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை தடை தாண்டல் பரீட்சை!

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புக்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கான தடைத்தாண்டல் பரீட்சை ஜுலை மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தில் நடைபெற உள்ளது.

அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் அரச நிர்வாக சுற்றறிக்கை இல 16/2016 மற்றும் ஒன்றிணைந்த சேவை சுற்றறிக்கை இல. 04/2016 அடிப்படையில், ஆன்லைன் (ONLINE) முறையின் மூலம் இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும்.

மேற்கூறப்பட்டுள்ள சுற்றறிக்கையானது அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் மற்றும் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் ஜுன் மாதம் 25 ஆம் திகதி முதல் ஜுலை மாதம் 08 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Posts