தெல்லிப்பளை பிரதேசசெயலகத்திற்குட்பட்ட 5 ஆயிரத்து 100 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவுள்ளதாக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களது 201.3 ஏக்கர் காணிகள் நேற்று சனிக்கிழமை மீளக்கையளிக்கப்பட்டன.
இந்தநிலையில் தெல்லிப்பளை பிரதேசசெயலர் பரிவுக்குட்பட்ட பகுதிகளில் 5100 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வல்லை, தெல்லிப்பளை, அராலி வீதியை அண்மித்த 126.18 ஏக்கர் காணிகளும், காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை அண்மித்த 63 ஏக்கர் காணிகளும், தெல்லிப்பளை 18 ஆவது சிங்க ரெஜிமேன்ற் படைமுகாமை அண்மித்த 12 ஏக்கர் காணிகளுமாக மொத்தமாக 201.3 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
எனினும் கையளிக்கப்பட்ட காணிகளில் நாளை 9 மணியிலிருந்து மக்கள் சென்று துப்பரவு பணிகளை மேற்கொள்ள முடியும் எனவும் கிராமசேவகர் ஊடாக காணி எல்லைகள் தொடர்பில் உறுதிப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.