யாழ்.காங்கேசன்துறை வீதியில் உள்ள பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் மாணவிகள் சிலருடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த ஆசிரியர் தொடர்பாக வலய கல்வி பணிமனை உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என பெற்றோர்கள் கோரியுள்ளனர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த ஆசிரியர் அங்கு ஏழாம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவிகள் சிலர் மீது பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாக ஆர்ப்பட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மற்றொரு ஆசிரியராலும், குறித்த மாணவிகளின் பெற்றோர்களாலும் அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்த போதும் அதிபர் இச் சம்பவத்தை மூடி மறைக்க முட்பட்டுள்ளார்.
இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக கல்விப் பணிப்பாளர்களும் நீதிமன்றமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும் அப் பாடசாலையின் மாணவர்களும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன் வரணிப்பகுதியில் உள்ள ஒர் பாடசாலையிலும் இது போன்றதொரு சம்பவம் இடம்பெற்று, அது தொடர்பில் அப் பாடசாலையின் அதிபர் குறித்த ஆசிரியர் உட்பட ஜவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்க்கதாகும்.