யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், அந்தப் பாடசாலையில் கல்விகற்கும் மாணவிகள் ஐவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் இன்று புதன்கிழமை (22) மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டத்தால் பாடசாலைச் சூழலில் பதற்றம் நிலவுகின்றது.
இதனையடுத்து, கலகம் அடக்கும் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டு, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றனர்.