மருந்துகளின் விலையை குறைப்பதற்கான வழிவகை ஒன்றை இன்னும் மூன்று மாதங்களுக்குள் தயாரிக்குமாறு, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் புதிய தலைவர் அசித டி சில்வாவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி குறைந்த விலைக்கு அதி சிறந்த தரத்துடனான மருந்துகளை மக்களுக்கு வழங்கும் படி அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
அசித டி சில்வா பதவி பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ராஜித்த மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
அத்துடன் தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாடு சபை மக்களுக்கு மருந்துகளை சாதாரண விலையில் பெற்றுக்கொடுப்பதற்காகவே அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் மருந்துகளின் விலை கடந்த காலங்களில் நூற்றுக்கு 40 வீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.