யாழ் பிரபல பாடசாலையில் 05 மாணவிகள் ஆசிரியர் ஒருவரால் பாலியல் துஸ்பிரயோகம்

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி பிரபல பாடசாலையில் 12 வயது நிரம்பிய 05 மாணவிகள் அப்பாடசாலை ஆசிரியர் ஒருவரால் கடந்த வாரம் பாடசாலையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.

இதனை நேரில் கண்ட அப் பாடசாலை பெண் ஆசிரியர் ஒருவரினால் பாடசாலை அதிபரிற்கு அறிவிக்கப்பட்டபோது அவரால் இது தொடர்பாக எதுவித சடவடிக்கையும் எடுக்காது சம்பந்தப்பட்ட ஆசிரியரை ஏனைய பாடசாலை ஆண் ஆசிரியர்களுடன் சேர்ந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதுடன் முறையிட்ட குறிக்கப்பட்ட பெண் ஆசிரியரை அவசர அவசரமாக கல்வித் திணைக்கள உதவியுடன் இடமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக வலயக் கல்விப்பணிப்பாளருக்கு அறிவித்தும் அவரால் இது தொடர்பாக எதுவித சடவடிக்கையும் எடுக்காது சம்பந்தப்பட்ட ஆசிரியரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அறிந்த சமூகஆர்வலர், நலன்விரும்பிகள் இப்பிரச்சனை தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளினால் இது தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வரும் இதே வேளையில் இவ்விசாரணையைக் குழப்பும் நோக்கில் அப்பாடசாலை ஆசிரியர்கள்

இருவர் மாணவிகள் வீட்டுக்குச் சென்று பிள்ளைகளையும் பெற்றோரையும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்று அச்சுறுத்தியுள்ளனர்.

மேலும் இவ்விசாரணை மூலம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையில் இவ்வாறான துஸ்பிரயோகம் நீண்ட காலமாகவே இடம்பெற்று வருவதுடன், இதில் பல ஆண் ஆசிரியர்களும் ஒரு பெண் ஆசிரியையும் தொடர்புபட்டது தெரியவந்துள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் பெருமளவு மறைமுகமாக நடைபெற்று வருவதை சமூக ஆர்வலர் தெரிவிப்பதுடன் இவ்வாறானவர்களுக்கு கடுமையான தண்டனைகளை கடப்பிடிக்கவேண்டும் என்னு கருத்து தெரிவித்துக் கொள்கின்றனர்.

Related Posts