எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து பேரூந்துக் கட்டணங்கள் 3.2 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சற்றுமுன்னர் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பேரூந்துக் கட்டண அதிகரிப்புத் தொடர்பாக போக்குவரத்து அமைச்சுடன் இன்று முற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதனையடுத்து கட்டண உயர்வு குறித்து தீர்மானிக்கப்பட்டதாக கெமுணு விஜேரத்ன தெரிவித்தார்