சிறுமி கொலை : சந்தேகநபரின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

மஹியங்கனை – ரிதீமாலியத்த – மொரான பிரதேசத்தில் ஒன்பது வயது பாடசாலை மாணவியின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள  சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதனடிப்படையில் , குறித்த சிறுமி பாடசாலை விட்டு வீடு வரும் வழியில் வைத்து அவரை கடத்தியதாக குறித்த சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

பின்னர் சிறுமியின் உணவு பெட்டியில் சுற்றப்பட்டிருந்த துணியை கொண்டு அவரின் வாயை கட்டியுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான  சிறுமி மயக்கமடைந்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

பின்னர் சிறுமியை ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் வீசி சென்றதாக சந்தேகநபர்  காவற்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சிறுமி காணாமல் போன நேரத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது வரையில் குறித்த சந்தேகநபர் உதவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையிலேயே சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்கி சந்தமாளி பிரேமசிறி என்ற குறித்த சிறுமி  குடா லூனுக கனிஷ்ட வித்தியாலயத்தில் நான்காம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மஹியங்கனை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts