இராணுவத்தின மீது படிந்துள்ள கறைகளை அகற்றவும் வடக்கில் இன அழிப்பு இடம்பெறவில்லை என்பதை நிரூபிக்கவும், தற்போது காலம் வந்துள்ளதாக முன்னாள் இராணுவ தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
யத்தக்குற்ற விசாரணைகளை தாமதப்படுத்தவது நாட்டிற்கு மேலும் அழுத்தமாகவே அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீலங்காவின் செய்றபாடுகள் எவ்வாறானதாக இருக்க வேண்டும் என கொழும்பிலுள்ள ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும்போதே சரத் பொக்சோக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் முடிவடைந்ததுடன் நாடு விடுதலை அடையப்போவதில்லை, யுத்தம் நிலவிய எந்த நாட்டிலும் அவ்வாறான எதுவும் இடம்பெறவுமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
யுத்ததை முடிவுக்கு கொண்டு வந்தவுடன் உண்மைகளை வெளிப்படுத்தவும் துணிவுடன் செயற்பட்டிருக்க வேண்டும் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எனினும் நாம் ஆரம்பத்திலிருந்தே உண்மைகளை கண்டறிவதில் தாமதமாகவே செய்றபட்டு வருவமதாகவும் அவர் கூறியுள்ளார்.