செவ்வாய் கிரகத்தில் பலவித வேலைகளை செய்ய ஆட்கள் தேவை என்று நாசா விளம்பரம் வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பது பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பலவித வேலைகளை பார்ப்பதற்கு ஆட்களை தேடும் பணியின் தீவிரமாக களமிறங்கியுள்ளது நாசா.
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு பயணம் செய்ய, விவசாயம் செய்ய, சர்வேயர்கள், ஆசிரியர்கள் என பல வேலைகளுக்கு ஆட்கள் தேவை என நாசா வேலை வாய்ப்பு போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஒரு போஸ்டரில் செவ்வாய் கிரகத்தில்உ ள்ள பள்ளதாக்குகளை ஆய்வு செய்ய ஆட்கள் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் செவ்வாயில் வேலை செய்ய நபர்கள் தேவை என்று மற்றொரு போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், செவ்வாயில் உயிர் பிழைப்பதற்கான பணிகளை செய்ய விவசாயிகள் தேவை, செவ்வாயையும் அதன் நிலவையும் ஆராய சர்வேயர்கள் தேவை, செவ்வாயை பற்றியும் அதன் இரு நிலவை பற்றியும் விளக்க ஆசிரியர்கள் தேவை, செவ்வாயில் எதிர்காலங்களை உருவாக்கும் பணிகளை செய்ய பொறியாளர்கள் தேவை, நீங்கள் தான் எங்களுக்கு தேவை என்று பல போஸ்டர்கள் வெளிடப்பட்டுள்ளன.