Ad Widget

‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்திற்கு தடை கோரி இசைப்பிரியாவின் தாய், சகோதரி வழக்கு

இலங்கையில் நடந்த இறுதிபோரில் புலிகள் அமைப்பின் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றிய இசைப்பரியா கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘போர்களத்தில் ஒரு பூ’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளனர். ஏ.சி.குருநாத் செல்லச்சாமி என்பவர் தயாரித்துள்ளார், கே.கணேசன் என்பவர் இயக்கி உள்ளார். பல பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்த படத்தை தமிழ்நாட்டில் திரையிட தணிக்கை குழு அனுமதி மறுத்துவிட்டது. மறுதணிக்கையிலும் சான்றிதழ் கிடைக்கவில்லை.

porkalthil-oru-poo

தணிக்கை குழுவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ‘போர்களத்தில் ஒரு பூ’ படத்துக்கு தடைவிதிக்க கோரி இசைப்பிரியாவின் தாயார் தர்மினி வாகிசன், சகோதரி டி.வேதரஞ்சனி ஆகியோர் தங்கள் வழக்கறிஞர் மூலம் சென்னை உயர்நிதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சகோதரி சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது, இங்கிலாந்து நாட்டிற்கு வந்து விட்டோம். நான் என் 3 குழந்தைகளுடன் வசிக்கிறேன். இந்த நிலையில், என் தங்கை இசைப்பிரியா என்ற ஷோபா போர்களத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கொண்டு போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகள் மூலம் தெரிந்துக் கொண்டோம். அந்த திரைப்படத்தில், என்னையும், என் தங்கை இசைப்பிரியாவையும் போராளிகள் என்று சித்தரித்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வெளியானால், எங்கள் குடும்பத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிடுவது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் குருநாத் செல்லசாமி, இயக்குனர் கணேசன் ஆகியோர் லண்டனில் உள்ள இசைப்பிரியாவின் தாயார் மற்றும் அவருடைய சகோதரியிடம் விடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசி தீர்வு காண வேண்டும். அதற்காக நீதிமன்றத்தில் உள்ள சமரச தீர்வு மைத்தில் வரும் திங்கள் கிழமை மாலை 3 மணிக்கு விடியோ கான்பிரன்ஸ் நடத்தப்படும், என்று கூறியதோடு இது தொடர்பான முடிவுகளை அறிக்கையாக நீதிமன்றத்தில் வரும் 23 ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

Related Posts