தனியார் சுகாதார சேவைகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தனியார் சுகாதார சேவை ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் நிர்ணயிக்கப்ட்டுள்ளதுடன், மருத்துவ பரிசோதனை கட்டணங்கள், மருத்துவ கட்டணங்கள், மற்றும் வைத்தியசாலை கட்டணங்களை அதிகரிக்க ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தனியார் வைத்தியசாலைகளின் பிரதானிகளுடன் கொழும்பில் நேற்று காலை நடைபெற்ற சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன் சுகாதார சேவைகளை அபிவருத்தி செய்யவதற்கு அரச மற்றும் தனியார் வேலைத்திட்டங்களுக்கு யோசனைகளை முன்வைப்பதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தலைமையில், 7 பேர் கொண்ட குழுவை நியமிப்பதற்கும் அமைச்சர் இதன்போது நடவடிக்கை எடுத்துள்ளார்.