வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் நிதியுதவியின் மூலமாக கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தின் அணுசரனையில் மாற்றுத் திறனாளிகள், பெண்கள், நோய்த் தாக்கத்துக்குள்ளானவர்கள் ஆகியோருக்கான தொழிற்பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு வீட்டு மின் உபயோகப் பொருள்களை திருத்துதல், தையல் வேலை ஆகிய பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்வரும் 22ஆம் திகதி புதன்கிழமை காலை 9 மணிக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ திருத்துதல் பயிற்சிநெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையான நாட்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், கிளிநொச்சியில் யாழ் கண்டி வீதியில், 155ஆம் கட்டைக்கு அருகாமையில் அமைந்துள்ள இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையில் இந்தப் பயிற்சி நெறிகள் நடத்தப்படவுள்ளது.
ஒவ்வொரு தொழிற்பயிற்சி நெறியும் 125 மணித்தியாலங்களைக் கொண்டதாகக் இருக்கும். இப்பயிற்சி நெறிகளில் புதிதாக சேர்வதற்கு விரும்புபவர்கள் அன்றைய தினம் வந்து தங்களை இணைத்துக்கொள்ள முடியும்.
மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் 021-2283363 எனும் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் இலக்கத்துடன் அல்லது 021-2285686 எனும் தொழிற்பயிற்சி அதிகார சபையின் இலக்கத்துடன் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற முடியும்.